×

ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை :ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “சென்னையில் ரூ.50 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் பாத சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,KK Nagar Government ,Rehabilitation ,Hospital ,
× RELATED பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை...