×

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது மைக் இணைப்பை துண்டித்ததற்கு கடும் எதிர்ப்பு..!!

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது மைக் இணைப்பை துண்டித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் முறைகேடு விவகாரம் முக்கியமானது என கருதுகிறோம் என்பதை நாட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி ராகுல் காந்தி பேசினார். அப்போது , ராகுல் காந்தி மைக் இணைப்பை துண்டித்துவிட்டு சபாநாயகர் ஓம்பிர்லா அமைச்சர் அர்ஜூன் ராமை பேச அழைத்தார். ராகுல் பேசிக்கொண்டிருந்தபோதே மைக் இணைப்பை துண்டித்ததை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

ராகுல் மைக்கை துண்டித்ததால் கோபம் – காங். எம்.பி.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது மைக் துண்டிக்கப்பட்டதாக காங்கிரஸ். எம்.பி. திபேந்தர் சிங் புகார் அளித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு குறித்து அவையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். ராகுலின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபம் அடைந்ததாக திபேந்தர் சிங் பேட்டி அளித்துள்ளார்.

The post மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது மைக் இணைப்பை துண்டித்ததற்கு கடும் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Rahul ,Delhi ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள்...