×

நீட் தேர்வு தொடர்பாக ஜூலை 7ம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர் புகார் அளிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி : நீட் தேர்வு தொடர்பாக ஜூலை 7ம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர் புகார் அளிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் முறைகேடு புகார்கள் மட்டுமின்றி, பரிந்துரைகள், கருத்துக்களையும் சொல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்கள், கருத்துக்களை தெரிவிப்பதற்கான இணையதள முகவரியையும் வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம். நீட் முறைகேடு தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவிடம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீட் தேர்வு தொடர்பாக ஜூலை 7ம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர் புகார் அளிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Ministry of Education ,Delhi ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைப்பு