×

கைகளை சுத்தமாக கழுவ மாணவர்களுக்கு செயல்விளக்கம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் சமுதாயம் சிறப்பாக இருக்கும்

*விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆணையர் பேச்சு

சித்தூர் : கைகளை சுத்தமாக எப்படி கழுவ வேண்டும் என்று மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளித்து, குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் சமுதாயம் சிறப்பாக இருக்கும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆணையர் அருணா பேசினார். சித்தூர் கிரீம்ஸ் பேட்டை பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு செய்முறை கூட்டம் நேற்று நடைபெற்றது. தற்போது மழைக்காலம் என்பதால் ஆரோக்கியத்தில் அனைத்து மாணவ, மாணவிகளும் கவனம் தேவை என மாநகராட்சி ஆணையர் அருணா குழந்தைகளுக்கு செய்முறை மூலம் அவர்களின் கைகளை எவ்வாறு கழுவிக்கொள்ள வேண்டும், உணவு சாப்பிட்ட பிறகு உணவு சாப்பிடுவதற்கு முன்பு எவ்வாறு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது: குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் சமுதாயம் சிறப்பாக இருக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்து பிரச்சாரம்-2024 திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கான கை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு சித்தூர் மாநகரத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். மழைக்காலத்தின் பின்னணியில் வயிற்றுப்போக்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது மழை காலம் என்பதால் தண்ணீரை நன்றாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும், சுத்தமான மற்றும் புதிய உணவை உண்ண வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்து வீட்டையும் சுற்றுப்புற பகுதியையும் தூய்மையாக வைத்துக் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மழைக்கால பின்னணியில், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து வார்டுகளிலும் வயிற்றுப்போக்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். நோய்கள் வராமல் மாணவ மாணவிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது எவ்வாறு பயிற்சி வழங்கினார்களோ அதை பின்பற்றி நாள்தோறும் உணவுக்கு முன்பும், உணவுக்கு பின்பு கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு எந்த ஒரு நோய் பரவாமல் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மாணவ மாணவிகளுக்கு கைகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என செய்முறையை காண்பித்தனர். மாணவர்கள் ஆறு முறை கைகளை சுத்தம் செய்யும் நடைமுறைகளை செய்தனர். இதில் சித்தூர் எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி அனில்குமார் நாயக், எம்இஓக்கள் செல்வராஜ், மோகன், எச்.எம்.ரமேஷ்பாபு, வட்டார தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

The post கைகளை சுத்தமாக கழுவ மாணவர்களுக்கு செயல்விளக்கம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் சமுதாயம் சிறப்பாக இருக்கும் appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Commissioner ,Aruna ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில்...