×

கேரளாவில் எஞ்சினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக கழன்றதால் பரபரப்பு..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் எஞ்சினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து டாடா நகர் செல்லும் விரைவு ரயிலில் எஞ்சினில் இருந்து பெட்டிகள் தனியாக கழன்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பெட்டிகளை எஞ்சினுடன் இணைத்தனர். எர்ணாகுளம் டாடா நகர் செல்லும் விரைவு ரயில் இன்று காலை 10.45 மணிக்கு திருச்சூரில் இருந்து சொர்னூர் சென்றுகொண்டிருந்தது. வள்ளத்தோடு என்ற இடத்தில் ரயில் சென்றபோது திடீரென்று பெரும் சப்தத்துடன் எஞ்சினில் இருந்து பெட்டிகள் தனியாக கழன்றன.

The post கேரளாவில் எஞ்சினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியாக கழன்றதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Ernakulam ,Tata Nagar ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா