×

மாமல்லபுரம் அருகே ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்!!

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் போலீஸ் சுட்டு பிடித்தது. கூலிப்படை கும்பல் தலைவன் சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தது. ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், காரில் வந்த கும்பலை மடக்கினர். போலீசாரை தாக்கி விட்டு ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்ப முன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சீர்காழி சத்யாவிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

The post மாமல்லபுரம் அருகே ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Mamallapuram ,Chengalpattu ,Sirkazhi Satya ,
× RELATED நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 ரவுடிகள் கைது