×

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 13பேர் பலி..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். பெலகாவி மாவட்டத்தில் சாவாடத்தி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது குண்டனஹள்ளி பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றி சென்ற மினி பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.புனே- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் சிவமோஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் பஸ் ஓட்டும்போது டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 13பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Haweri district ,HAWARI DISTRICT, KARNATAKA STATE ,Sivamoka ,Sami ,Elamma Temple ,Chawadati ,Belagavi district ,Haveri district ,
× RELATED கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே...