×

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை

திருச்சி, ஜூன் 28: தனியார் நிறுவன டிரைவர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய இருவர் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சரகம், தஞ்சாவூர் சாலை தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்த தனியார் நிறுவன டிரைவர், கடந்த மே 19ம் தேதி வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த அவரது டூவீலரை மாயமானது. இதுகுறித்த புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, ஜெயில் பேட்டையை சேர்ந்த சாித்திர பதிவேடு குற்றவாளிகளான வினோத்குமார் (எ) ஆந்தை (23) மற்றும் வரகனோியை சோந்த இம்ரான்கான் (எ) பூரான் (20) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில், ரவுடி வினோத்குமார் (எ) ஆந்தை மீது காந்தி மார்க்கெட், தில்லைநகா், பொன்மலை, பாலக்கரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இம்ரான்கான் (எ) பூரான் மீது காந்தி மார்க்கெட், அரியமங்கலம், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட காவல் நிலையங்களிலில் வழக்குகள் நிறுவையில் உள்ளது. இதையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையை பாிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, இருவர் மீதும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதற்கான ஆணையை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வினோத் குமார் (எ) ஆந்தை மற்றும் இம்ரான்கான் (எ) பூரான் ஆகிய இருவரிடமும் சார்வு செய்தனர். மேலும் திருச்சி மாநகாில் இதுபோன்று திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் கமிஷனர் காமினி கடுமையாக எச்சரித்துள்ளார்.

The post தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : City Police ,Gundas ,Trichy ,Tiruchi Gandhi Market ,Charakam ,Thanjavur Road Dharanallur Pookkollai Street ,Metropolitan Police ,Dinakaran ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி