×

அரியலூரில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், ஜூன் 28: அரியலூரில் இன்று நடைபெறும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்து தீர்வு காணலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இன்று (28ம் தேதி) மாலை 3.30 மணியளவில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post அரியலூரில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,District Collector ,Anne Mary Swarna ,Dinakaran ,
× RELATED 21 வயதிற்குட்பட்ட ஆண் 18 வயதுடைய பெண்...