×

தக்காளி விலை கிடுகிடு உயர்வு கிலோ ₹80க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் திண்டாட்டம்

பெரம்பலூர், ஜூன் 28: ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் இல்லத் தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். ஓரிரு நாளில் மீண்டும் சதம் அடிக்கும் அபாயம் உள்ளது. சாதாரணமாக வீடுகளில் வைக்கப்படும் சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும், தக்காளியின் தேவைஇன்றியமையாதது. சாம்பார், குழம்பு, ரசம் ஆகியவற்றிற்கு மட்டு மன்றி தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, தக்காளி ஊறுகாய், தக்காளி சாஸ் என பல்வேறு வகையான உணவுப் பொருள் தயாரிப்பு அனைத்திற்கும் தக்காளி இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் விளைச்சல் குறைவு, பெரம்பலூர் மாவட்டத்திற்கான வரத்து குறைவு போன்ற காரணங்களால் தற்போது தக்காளி விலை கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத் திற்கு அருகில் உள்ள சேலம் மாவட்டம், தலை வாசல், ஆத்தூர், கெங்க வல்லி,

திருச்சி மாவட்டம் காந்திமார்க்கெட்,துறையூர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்\” கிருஷ் ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர் பகுதி களில் இருந்தும் தக்காளி இறக்குமதி செய்யப்படு கிறது. இவை தவிர பெரம் பலூர் மாவட்டத்தில் அரச லூர், அன்னமங்கலம், குரும்பலூர், ஈச்சம்பட்டி, களரம்பட்டி, தம்பிரான்பட்டி, சத்திரமனை, ரெங்கநாத புரம், கீழக்கனவாய், எளம் பலூர் ஆகிய பகுதிகளில் சிறு விவசாயிகளிடமிருந் தும் எசனை, அனுக்கூர், உள்ளிட்ட பகுதிகளில் பெரு விவசாயிகளிடமிரு ந்தும் உள்ளூர் தக்காளிகள் உழவர் சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட் முதல் சாலையோர கடைகள் வரையில் விற்பனை செய் யப்படுவதோடு, தள்ளு வண்டிக் கடைகள், மினி வேன்கள், லோடு ஆட்டோக் கள் வரை பயன்படுத்தப்ப ட்டு ஊர்ஊராகவும் கொண் டுசென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதத்தில் கிலோ 20 ரூபாய் என விலை வைத்து 100 ரூபாய்க்கு 5 கிலோ தக்காளி பைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக தக்காளி விலை இரண்டு மூன்று மடங்கு உயர்ந்து இல்லத் தரசிகளை வேதனைக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக மார்க்கெட் உள் ளிட்ட வெளியிடங்களில் விற்பனையாகும் விலை யைக் காட்டிலும் 20, 30 சதவீதங்கள் குறைத்து விற்கக்கூடிய பெரம்பலூர் உழவர் சந்தையில் கடந்த 15ம் தேதி 68 ரூபாய்க்கும் 18, 19ம் தேதிகளில் 72 ரூபாய் முதல் 80 ரூபாய் வரைக்கும், 21,22,23ம் தேதிகளில் 85 ரூபாய் வரைக்கும் விலை வைத்து விற்கப்பட்ட தக்காளி, தினசரி காய்கறி மார்க்கெட்டிலும் சாலை யோர கடைகளிலும் சதம் அடித்து விற்பனை செய்யப்பட்டன.

உழவர் சந்தையில் கிலோ 60 ரூபாய்க்கு விற் கப்படும் தற்காலிக தினசரி காய்கறி மார்க்கெட்டிலும் வெளியூர்களிலும் ரூபாய் 80க்கு விற்கப்பட்டு வருகி றது. தொடர்ந்து தக்காளி வரத்து குறைந்து வருவ தால் அடுத்தடுத்து பருவ மழை சீசனும் தொடங்க உள்ளதால், விரைவில் தக் காளிவிலை 100 ரூபாய்க்கு உயர்ந்து மீண்டும் சதம் அடிக்க உள்ளது. இதனால் வேலைகளுக்கு செல்லும் கணவருக்கும், பள்ளிகளுக் குச் செல்லும் பிள்ளைக ளுக்கும் தக்காளி சட்னி, தக்காளி சாதம் சமைத்துக் கொடுக்கும் இல்லத்தரசிகள் பாடு பெரும் திண்டாட்டமாகி வருகிறது.

The post தக்காளி விலை கிடுகிடு உயர்வு கிலோ ₹80க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் திண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Dinakaran ,
× RELATED நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில்...