×

டிச.31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு மாணவர் சமுதாயம் அக்கறையோடு செயல்பட்டு

பெரம்பலூர், ஜூன் 28: நாளைய சமுதாயம் மது போதைக்கு அடிமையாகாதிருக்க மாணவர் சமுதாயம் அக்கறை கொண்டு மது போதை இல்லாத ஊரையும் நாட்டையும் உருவாக்க வேண்டும் என்று கீழக் கணவாய் அரசு பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் முகேஷ்குமார் பேசினார். தமிழக அரசு மற்றும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி ஆகியோரது உத்தரவுக ளின் பேரில், பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி யில் நேற்று(27ஆம் தேதி) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கீழக்கணவாய் அரசு பாலி டெக்னிக் கல்லூரியின் முன்பு தொடங்கிய பேர ணியை வேலூர் ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகை சிவசண்முகம் கொடிய சைத்துத் தொடங்கி வைத் தார். முன்னதாக கல்லூரி யின் ஒருங்கிணைப்பாளர் சுசீலா வரவேற்றார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மூகேஷ் குமார் பேரணிக்குத் தலைமை வகித்துப் பேசிய தாவது : தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருட்களான குட்கா, பான் மசாலா, கூல் லிப் போன்றவற்றை உண் பதால் வாய், தொண்டைப் பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சிகரெட் புகைப்பதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இது போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தி, போதைக்கு அடிமையாகிவிடக் கூடாது. அதேபோல் புகைப் பழக்கத் திற்கும் அடிமையாகி விடக் கூடாது. புகையிலைப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவதால் அதற்கு அடிமையாவதோடு, சிறுமூளை பாதிக்கப்பட்டு ஞாபக சக்தி குறையும் அபாயம் உள்ளது. மேலும் நரம்புத் தளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

குடிப்பழக்கத்திற்கு அடிமை யாவதால் கல்லீரல் பாதிக் கப்பட்டு படிப்படியாக உயி ரிழக்கும் நிலை தான் ஏற் படும். குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உயர் ரத்த அழுத்தம், அதனால் மன உளைச்சல், குடற்புண் வயிற்றுப்புண் ஏற்படும். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒருவர் இறப்பதால் அவரது மனைவி, பிள்ளை கள்என அவரைசார்ந்துள்ள குடும்பமே பாதிக்கப்படும். மேலும் குடி ஒரு குடும்பத்தை மட்டுமன்றி அந்த குடும் பத்தைச் சார்ந்துள்ள சமூ கத்தையே பாதிக்கும்.எனவே மது போதை பழக் கங்களுக்கு இளைய சமு தாயம் அடிமையாகி விடக் கூடாது. அதோடுமட்டுமன்றி கல்லூரி மாணவ மாணவிகள் தாங்கள் மதுவுக்கும் போதைக்கும் அடிமையாகாமல் இருப்பதோடு தங் களது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் தெரி வித்து, மதுவினால் ஏற்ப டும் பாதிப்புகள் குறித்து தவறாமல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நாளைய சமுதாயம் மது போதைக்கு அடிமையாகாமல் இருக்க மாணவர் சமு தாயம் அக்கறை கொண்டு மது போதை இல்லாத ஊரையும் நாட்டையும் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் வேலூர் ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகை சிவசண்முகம் பேசுகையில், மது மற்றும் போதை யினால் உண்டாகும் தீமை களைவிளக்கி, மதுவினால் உடல்நலம் கெடுவதோடு, கண்பார்வையை இழக்க வும் நேரிடும். மது அருந்து வோருக்கு சமூகத்தில் மதிப்புகள் குறையும் என அறிவுரைகளை வழங்கினார். பின்னர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஊராட்சி மன்ற தலைவர் வாசிக்க, அதனைக் கல்லூரியின் முதல்வர் மற்றும் கல்லூரி யில் பணிபுரியும் துறைத் தலைவர்கள் புனிதவதி, பாலசுப்பிரமணியம், முருகானந்தம், சுகந்தி மற்றும் விரிவுரையாளர்கள், திறன் மிகு உதவியாளர்கள், இரவு நேரக் காவலர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ,

மாணவிகள் உறு திமொழியை ஏற்றுக் கொண்டனர். கல்லூரியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கீழக்கணவாய் கிராமத்தில் அனைத்து தெருக்களுக் கும் சென்று, பின்னர் செட் டிக்குளம் சாலை வழியாக கல்லூரியைவந்தடைந்தது. பேரணியின் முடிவில் கல் லூரியின் கணிப்பொறித் துறைதலைவர்(பொ) சசி நன்றி கூறினார்.

The post டிச.31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு மாணவர் சமுதாயம் அக்கறையோடு செயல்பட்டு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Lower Pass Government Poly Technical College ,Principal ,Mukesh Kumar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில்...