×

மாணவியர் மாதம் ரூ.1,000 பெற விண்ணப்பிக்கலாம்

 

விருதுநகர், ஜூன் 28: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர் மாதம் ரூ.ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகிய மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து தேர்ச்சி பெற்ற 3039 மாணவிகள் உள்ளனர். இந்த மாணவியர் தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை அனைத்து சான்றிதழ்களுடன் படிக்கும் கல்லூரிகளில் வழங்கி திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அல்லது போனில் 04562-252701 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post மாணவியர் மாதம் ரூ.1,000 பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Muvalur Ramamirtham ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...