×

வங்கியில் கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கறவை மாடு வளர்ப்போர் கோரிக்கை

 

வருசநாடு, ஜூன் 28: வருசநாடு பகுதியில் உள்ள கறவை மாடு வைத்து தொழில் செய்யும் விவசாயிகள், வங்கியில் கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு, கடமலைக்குண்டு, வைகைநகர், நந்தனார்புரம், முறுக்கோடை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், உரக்குண்டான் கேனி, மேலப்பட்டி, முத்தலாம் பாறை உள்ளிட்ட பகுதிகளில் 50க்கு மேற்பட்ட பால்பண்ணை சங்கங்கள் மூலம் கடமலைக்குண்டுவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கறவை மாடு வளர்ப்போர் வரவு, செலவு கணக்கு வைத்துள்ளனர்.

இதில் கணக்கு வைத்துள்ள கறவை மாடு உரிமையாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில், தாட்கோ மூலம் கறவை மாடு வளர்ப்புக்கு அரசு வழங்கக்கூடிய கடனுதவி கேட்டு சிலர் விண்ணப்பித்துள்ளனர். தனிநபர் கறவை மாடு கடனுதவி கேட்டு தகுதியான பலர் தினமும் வங்கி அலுவலரை அணுகி வருகின்றனர்.

ஆனால் தனியாக கறவை மாடு வளர்ப்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தகுதியான கால்நடைகள் வளர்ப்போருக்கு கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வங்கியில் கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கறவை மாடு வளர்ப்போர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Theni district ,Kadamalaikundu ,Vaigainagar ,Nandanarpuram ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டுவில் சேதமடைந்த வேளாண்...