×

குருவாயூர் கோவில் உண்டியல்கள் திறப்பு ரூ.7.36 கோடி வசூல்

 

பாலக்காடு,ஜூன்28: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் ஜூன் மாத உண்டியல் வருவாய் 7 கோடியே 36 லட்சத்து 47 ஆயிரத்து 345 ரூபாய் கிடைத்தது. மேலும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய 3 கிலோ 322 கிராம் தங்கமும்,16 கிலோ 670 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

எஸ்.பி.ஐ., இ-பே உண்டியல் மார்க்கமாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 696 ரூபாயும், யூ.பி.ஐ., வங்கி இ-பே உண்டியல் மூலமாக 17 ஆயிரத்து 266 ரூபாயும் வருவாய் வந்துள்ளன. மேலும் செல்லாத 2000 ரூபாய் நோட்டுக்களில் 23ம்,, 1000 ரூபாய் நோட்டுக்களில் 56ம், 500 ரூபாய் நோட்டுக்களில் 48ம் உண்டியலில் கிடைத்தன. உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

The post குருவாயூர் கோவில் உண்டியல்கள் திறப்பு ரூ.7.36 கோடி வசூல் appeared first on Dinakaran.

Tags : Guruvayur ,Palakkad ,Guruvayur temple ,Kerala ,
× RELATED குருவாயூர் கோயிலுக்கு பிரிண்டிங் மிஷின் காணிக்கை