×

அவைக்கு இடையூறு 12 எம்பிக்களுக்கு உரிமை மீறல் குழு எச்சரிக்கை

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று உரிமை மீறல் குழு தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் உட்பட 12 எதிர்க்கட்சி எம்பிக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம், அவை தலைவரின் வழிகாட்டுதல்களை வேண்டுமென்றே புறக்கணித்தனர்.

சபை விதிகளை மீண்டும் மீண்டும் மீறி சபை நடவடிக்கைகளை சீர்குலைத்து தவறான நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அவைக்கு இடையூறு 12 எம்பிக்களுக்கு உரிமை மீறல் குழு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Violation of Rights Committee ,Rajya Sabha ,Aam Aadmi Party ,Sanjay Singh ,House ,Violation Committee ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவையில் 6 புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு