×

3000 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ3 கோடி தறிகள் தறி உபகரணங்கள்: அமைச்சர் காந்தி அறிவிப்பு


தமிழக சட்டப் பேரவையில் நேற்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:
* கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.
* 3000 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.3 கோடி தறிகள் மற்றும் தறி உபகரணங்கள் வழங்கப்படும்.

* கைத்தறித் துணிகளின் விற்பனையினை அதிகரிக்க, சென்னை தீவுத்திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறிக் கண்காட்சி ரூ.2 கோடியில் 4 மாநில அளவிலான சிறப்பு கைத்தறிக் கண்காட்சிகள் ரூ.1.20 கோடி செலவிலும் நடத்தப்படும்.
* 2000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் தேசிய ைகத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 10 புதிய கைத்தறிக் குழுமங்கள் ரூ.20 கோடியில் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

The post 3000 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ3 கோடி தறிகள் தறி உபகரணங்கள்: அமைச்சர் காந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Gandhi ,R.Gandhi ,textile ,khatar ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர்...