×

யுரோ கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று நாளை ஆரம்பம்: நாக் அவுட் சுற்று ஆட்டங்கள்

பெர்லின்: ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யுரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கும் இந்தப்போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 15ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தன. கடைசியாக நடந்த எப் பிரிவு ஆட்டங்களில் முன்னணி அணியான போர்ச்சுகலை 0-2 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவும், செக் குடியரசை 1-2 என்ற கோல் கணக்கில் துருக்கியும் வென்றன.

அதனால் எப் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த போர்ச்சுகல், துருக்கி, ஜார்ஜியா அணிகள் நாக் அவுட் சுற்றான ‘சுற்று-16’க்கு முன்னேறின. மேலும் ஈ பிரிவில் உள்ள 4 அணிகள் மட்டும் தலா ஒரு வெற்றி, தோல்வி, டிரா என தலா 4 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தன. இருப்பினும் அணிகள் வாங்கிய கோல்கள் அடிப்படையில் உக்ரைனை தவிர மற்ற 3 அணிகளும் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறின.
மேலும் சி பிரிவில் இங்கிலாந்து, டென்மார்க், சுலோவேனியா, டி பிரிவில் ஆஸ்திரியா, பிரான்ஸ், நெதர்லாந்து என தலா 3 அணிகளும், ஏ பிரிவில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பி பிரிவில் ஸ்பெயின், இத்தாலி என தலா 2 அணிகளும் அடுத்தச் சுற்றுக்குள் நுழைந்தன.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. மொத்தம் 8 ஆட்டங்கள் ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6ம் தேதிகளில் நடத்தப்படும். அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 10ம் தேதியும், இறுதி ஆட்டம் ஜூலை 14ம் தேதியும் நடக்கும்.

The post யுரோ கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று நாளை ஆரம்பம்: நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : EURO CUP FOOTBALL ,Berlin ,Germany ,Italy ,Dinakaran ,
× RELATED யுரோ கோப்பை கால்பந்து: ஜெர்மனி கோல் மழை