×

சில்லி பாயின்ட்

* தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) போட்டியின் 8வது தொடர் ஜூலை 5ம் தேதி சேலத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் லீக், பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் நகரங்களிலும் நடத்தப்படும். இறுதி ஆட்டம் ஆக.4ம்தேதி சென்னையில் நடக்கும். அதற்கான அறிவிப்பை நேற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின்(டிஎன்சிஏ) தலைவர் அசோக் சிகாமணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) நிர்வாக இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவத்சவா ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சியில் டிஎன்சிஏ நிர்வாகிகள் பங்கேற்றனர்.

* தமிழக வீரர் பிரவீன் சித்திரைவேல், உட்பட 18 தடகள வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். அரியானாவின் பஞ்சகுலாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகள போட்டிகள் மூலம் இந்த எண்ணிக்கை 30தாண்டக்கூடும் என்று இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா தெரிவித்துள்ளார்.

* இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா-யு19 ஆண்கள் அணி, அங்கு 3 ஆட்டங்களைக் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இன்று முதல் ஆட்டம் செம்ஸ்ஃபோர்டில் நடக்கிறது. தொடர்ந்து 2வது, 3வது ஒருநாள் ஆட்டங்கள் ஹோவ் நகரில் ஜூலை 1, 3 தேதிகளில் நடைபெற இருக்கிறது.

* அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் யுஎஸ் ஓபன் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அதில் நேற்று முதல் சுற்று ஆட்டங்கள் தொடர்ந்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரியன்ஷூ ராஜ்வத், செக் குடியரசின் ஜான் லவுடா ஆகியோர் மோதினர். அதில் ராஜ்வத் 38நிமிடங்களில் 2-0 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

* அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்க நகரங்களில் நடக்கின்றன. அதில் நேற்று நடந்த பி பிரிவு லீக் ஆட்டங்களில் வெனிசுலா 1-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவையும், ஈகுவடார் 3-1 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவையும் வீழ்த்தின.

The post சில்லி பாயின்ட் appeared first on Dinakaran.

Tags : Silly ,Tamil Nadu Premier League ,TNPL ,Salem ,Coimbatore ,Tirunelveli ,Dindigul ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்