×

வழக்கறிஞர் சேமநல நிதி ரூ7 கோடியை 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு


சென்னை: தமிழ்நாட்டைப் போல வக்கீல் சேமநல நீதி புதுச்சேரி மாநில வக்கீல்களின் குடும்பத்துக்கும் வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பரிதா பேகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சிறப்பு அரசு பிளீடர் ஜான் ராஜாசிங் ஆகியோர் ஆஜராகி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வக்கீல் சேமநல நிதியை ரூ7 லட்சத்தில் இருந்து ரூ10 லட்சமாக உயர்த்தி அறிவித்தார்.

இதுதொடர்பான அரசாணை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதற்கான நிதியை அரசு விரைவில் வழங்கும்’’ என்றார். இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால், பல கோடி ரூாய் ஓய்வூதிய பலன்களை ஒரே நேரத்தில் வழங்கும் தமிழ்நாடு அரசு, வக்கீல்கள் நலனுக்கான வழங்கப்படும் சேமநல நிதிக்கும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிதி வழங்குவது கட்டாயம். தற்போது வக்கீல்கள் சேமநல நிதியில், ரூ13 கோடியே 3 லட்சத்து 14 ஆயிரத்து 291 உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு ரூ7 கோடியை 10 நாட்களுக்குள் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயருக்கு வழங்கவேண்டும்.

அந்த தொகை வந்ததும், அட்வகேட் ஜெனரல் தலைவராக உள்ள சேமநல நிதி அறக்கட்டளைக்கு ஐகோர்ட் தலைமை பதிவாளர் உடனடியாக வழங்கவேண்டும். அந்த நிதி கிடைத்ததும், ஒரு வாரத்துக்குள், இறந்த வக்கீல்களின் குடும்பத்துக்கு, அதாவது 441 விண்ணப்பத்தாரர்களில் 200 விண்ணப்பதாரர்களுக்கு சேமநல நிதியை முதல் கட்டமாக வழங்கவேண்டும். பின்னர், இதுகுறித்த அறிக்கையை வருகிற ஜூலை 19ம் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post வழக்கறிஞர் சேமநல நிதி ரூ7 கோடியை 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Parita Begum ,Madras High Court ,Puducherry ,Tamil Nadu ,SM Subramaniam ,C. Kumarappan ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!