×

ரயில் மோதி இருவர் பலி

பூந்தமல்லி: ஆவடி, அண்ணனூர் ரயில் நிலையம் இடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரயில் செல்லும் இருப்பு ரயில் பாதை உள்ளது. இங்கு, நேற்று மதியம் 2.40 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், ஆவடி அண்ணனூர் ரயில் நிலையம் இடையே அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் பாதையில் சுமார் நேற்று மதியம் 3 மணி அளவில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post ரயில் மோதி இருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Avadi ,Annanur ,Chennai Central ,Arakkonam ,
× RELATED போர்வையில் தீப்பிடித்து மாற்றுதிறனாளி பலி