×

செங்கல்பட்டில் கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பெண்கள் கைது: 15 மதுபாட்டில்கள் பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் விஷச் சாராயம் விற்பனை, கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை குறித்து அதிரடி சோதனைகள் நடத்த வேண்டும், என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் உத்தரவிட்டார். அதன்படி, செங்கல்பட்டு கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் செங்கல்பட்டு நகரில் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், கள்ள சந்தையில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர். செங்கல்பட்டு மலைபூங்கா பகுதியை சேர்ந்த கோபி என்பவரது மனைவி சாந்தி (45), செங்கல்பட்டு பச்சையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த மஞ்சுளா (40) மற்றும் செங்கல்பட்டு கே.கே.தெருவை சேர்ந்த ரகு என்பரது மனைவி கோமதி (40) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post செங்கல்பட்டில் கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பெண்கள் கைது: 15 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு...