×

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜூன் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் கடந்த 21ம்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களால் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 28.6.2024 அன்று காலை 10.30 மணிக்கு நடத்திட மாற்றி அமைக்கப்பட்டது.

அதன்படி, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாயகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை இன்று நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram District ,Farmers' Welfare Day Meeting ,
× RELATED நிலம் கையகப்படுத்துவதை கைவிட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு