×

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு: ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக ரூ.18,000 தொகுப்பூதியத்தில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், வணிகவியல், பொருளியியல் மற்றும் வரலாறு பாட பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன.காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

இக்காலிப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வி தகுதி:
முதுகலை ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று மதிப்பெண் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள்முதல் 2025 ஏப்ரல் மாதம் வரையில் மட்டுமே தற்காலிக பணிநியமனம் செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் பணி நாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியிடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி, அந்தந்த பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

The post ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar Health Higher Secondary Schools ,Chengalpattu ,Chengalpattu District ,Adi Dravidar Welfare High Schools ,Adi Dravidar Welfare Department ,Adhi Dravidar Welfare High Schools ,Dinakaran ,
× RELATED மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி...