×

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை 5 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். ரூ.100 கோடி நிலத்தை மிரட்டி அபகரித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் அளிக்கப்பட்டது. 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் தனது ஆட்கள் பெயரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எழுதிக்கொண்டதாக புகார் எழுந்தது. புகார் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார்.

The post ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Former minister ,5 ,CHENNAI ,MR. 5 ,Vijayabaskar ,CBCID ,M.R.Vijayabaskar ,AIADMK ,Ex-minister ,Dinakaran ,
× RELATED கே.பி.அன்பழகன் திடீர் மயக்கம்