×

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் 2 பேரை பாட்னாவில் கைது செய்தது சிபிஐ!

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ 2 பேரை பாட்னாவில் கைது செய்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் கைது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் பீகாரில் நேரடியாக விசாரணை நடத்தினர். அதில் மனீஷ்குமார் மற்றும் அஷுதோஷ் குமார் ஆகிய இருவரை பாட்னாவில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து அங்குள்ள கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கான வாரண்ட் பெற்று டெல்லி அழைத்து வந்து அவர்களை விசாரிப்பதற்கான முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் தீவிர கூடுகளாக மேலும் 6 பேர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்குகள் மற்றும் புகார்களை விசாரணைக்கு எடுத்தவுடன் சிபிஐ அதிகாரிகள் முதன் முறையாக 2 பேரை கைது செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நீட் விவகாரம் தொடர்பாக பீகாரில் கடுமையான எதிர்ப்புகள் மற்றும் மாணவர்களிடையேயான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சிபிஐ தனது முதல் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

The post நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் 2 பேரை பாட்னாவில் கைது செய்தது சிபிஐ! appeared first on Dinakaran.

Tags : CPI ,Patna ,Delhi ,NEET ,CBI ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பாட்னாவில் 2 பேரை கைது செய்தது சிபிஐ