×

‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று : உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட்

லக்னோ : ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட் செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம், பி ஆர்.கே.சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில் “நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில். அது அரசரிருக்கான இடம் கிடையாது. எனவே நாடாளுமன்றத்தில் முடியாட்சி மற்றும் ஏகாதிபத்தியத்துக்கான அடையாளமாக இருக்கும் செங்கோலை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக இந்திய அரசியல் அமைப்பின் மாதிரியை வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் .இதனிடையே செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,

“இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. ‘செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணி கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்,’ என்று பதிவிட்டுள்ளார்.

The post ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று : உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Sengol ,India ,Uttar Pradesh ,State ,Yogi Adityanath ,LUCKNOW ,Samajwadi Party ,P R ,Speaker ,Om Birla ,Parliament ,Choudhary ,Uttar ,Pradesh ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாளை விற்பனை செய்த...