×

பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,

“இன்று MSMEDay!

நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்கப் புத்தொழில் நிதி (TN SC/ST Fund), சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள், தமிழ்நாடு தென்னை நார்க் கொள்கை 2024, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை – 2023 உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் MSME-க்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்! என்று கூறியுள்ளார்.

The post பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Principal ,M.O. K. Stalin ,Chennai ,Chief Minister ,K. Stalin ,Tamil Nadu ,K. ,Extla ,Stalin ,Mu. K. Stalin ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில்...