×

கர்நாடகாவில் ஆட்சியரிடம் பெண் பார்க்கச்சொல்லி மனு அளித்த விவசாயி: 10 ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை என கவலை

கர்நாடகா: கர்நாடகாவில் 10 ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை என்றும் சீக்கிரம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து தருமாறும் மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் ஒருவர் மனு அளித்தார். கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களுடைய குறைகளை எழுத்து பூர்வமாக பதிவு செய்த் மனு அளித்தனர்.

அப்போது அந்த வரிசையில் வந்த தனககிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு மணப்பெண் தேடி தருமாறு மாவட்ட ஆட்சியர் நளீன் அத்தூளிடம் முறையிட்டார். விவசாயக்குடும்பத்திலிருந்து வந்த தனக்கு 10 ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டதும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மேடையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் சிரித்தனர். கடிதத்தை படித்து முடித்த ஆட்சியர் நகைச்சுவையாக பேசி அந்த இளைஞரிடம் சில கேள்விகளை கேட்டார். இறுதியாக பெண் தேடித்தருவதாக ஆட்சியர் உறுதியளித்தார். 10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள தங்கப்பா தனியார் கல்லூரி ஒன்றில் உதவி கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

The post கர்நாடகாவில் ஆட்சியரிடம் பெண் பார்க்கச்சொல்லி மனு அளித்த விவசாயி: 10 ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை என கவலை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,People's Grievance Theer camp ,Koppal district ,
× RELATED கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே...