×

இந்தியா இந்து நாடு அல்ல; இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு; பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு: சித்தராமையா

கர்நாடகா: இந்தியா இந்து நாடு அல்ல; இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு; பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், லோக்சபா முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார் அதில் ”இந்தியா ஹிந்து நாடு அல்ல என்பதை லோக்சபா தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கிறது என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு ஆம் என பதிலளித்த சித்தராமையா, ” இந்தியா இந்து நாடு அல்ல; இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு; பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு என சித்தராமையா தெரிவித்தார். பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் சேர்ந்து சபாநாயகரை இருக்கையில் அமரவைப்பது வழக்கமான மரபுதான். நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல், மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

The post இந்தியா இந்து நாடு அல்ல; இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு; பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு: சித்தராமையா appeared first on Dinakaran.

Tags : India ,Siddaramaiah ,Karnataka ,Chief Minister ,Amartya Sen ,Lok Sabha ,
× RELATED இந்தியா இந்து நாடல்ல; பன்முகத்தன்மை...