×

பார்ட் டைம் ஜாபில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி வங்கி ஊழியரிடம் ரூ.41.92 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தேனி, ஜூன் 27: தேனியைச் சேர்ந்த வங்கி ஊழியரிடம் வெப்சைட் மூலம் பகுதி நேர வேலையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறி ரூ.41 லட்சத்து 92 ஆயிரத்து 736 ஐ மோசடி செய்தவர்கள் மீது தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அருகே சீப்பாலக்கோட்டை ரோட்டில் உள்ள திருநகரில் குடியிருப்பவர் சுப்பிரமணியன் மகன் விஷ்வேஸ்வரன் (59). இவர் தேனியில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் 30ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததுள்ளது. அதில் வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலையாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவிகப்பட்டிருந்தது.

மேலும் தகவல்கள் வெளியிட்டவர்கள் கொடுக்கும் வெப்சைட்டில் பதிவு செய்து அப்ளிகேஷன்களை லைக் செய்து அதற்கு ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் குறுந்தகவல்கள் அனுப்பியவர்கள் கூறிய வெப்சைட்டில் பதிவு செய்ய வைத்து அவர்களாகவே ரூ.10 ஆயிரத்தை விஷ்வேஸ்வரன் பெயரில் டெமோ அக்கவுண்ட் ஓபன் செய்து அதில் ரூ.1140 லாபம் கிடைத்ததாக கூறி அந்த லாப படத்தை விஷ்வேஸ்வரன் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளனர். இதேபோன்று விஷ்வேஸ்வரன் தனியாக அக்கவுண்ட் ஓபன் செய்து வேலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.

இதனை நம்பி விஷ்வேஸ்வரன் கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை பல தவணைகளாக ரூ.41 லட்சத்து 92 ஆயிரத்து 736ஐ வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் அந்நிறுவனம் விஸ்வேஸ்வரனுக்கு எந்த ஒரு லாபத் தொகையும் வழங்கவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விஷ் வேஸ்வரன் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பார்ட் டைம் ஜாபில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி வங்கி ஊழியரிடம் ரூ.41.92 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Theni ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவனம் ₹6 கோடி மோசடி: தேனி குற்றப்பிரிவில் புகார்