×

லாரி மீது கார் மோதி வாலிபர் பலி

கண்டமங்கலம், ஜூன் 27: கண்டமங்கலத்தில் இருந்து புதுச்சேரி சென்ற கார் நின்றிருந்த லாரி மீது மோதி வாலிபர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் தனது நண்பர்கள் 3 பேருடன் புதுவைக்கு சுற்றுலா வந்துள்ளார். புதுச்சேரியில் சுற்றுலா முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு உளுந்தூர்பேட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் கொண்டு வந்த ஏதோ ஒரு பொருளை எடுக்க மறந்து விட்டனர். அதனை எடுத்து வருவதற்காக மீண்டும் புதுவைக்கு திரும்பி வந்தனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் கண்டமங்கலம் காவல் நிலையம் எதிரே தனியார் ஒப்பந்த நிறுவனத்தால் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணி பிரதிபலிப்பான் வைக்காத காரணத்தால் பாதையை மாற்றி சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காரை எதிரே நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி உள்ளனர். அதில் திருநாவுக்கரசு காரை ஓட்டி வந்துள்ளார். அவர் அருகே அமர்ந்திருந்த சாகுல் அமீத் மகன் அப்துல்ரகுமான் (32) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் அதில் பயணித்த ஆறுமுகன் மகன் திருநாவுக்கரசு (32), பாண்டியன் மகன் சாய் (32) சுப்பிரமணி மகன் பிரேம்குமார் (32) ஆகியோர் பலத்தகாயம் அடைந்தனர். அவர்களை கண்டமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டுவரும் தனியார் நிறுவனம் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் வைக்காததே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.

The post லாரி மீது கார் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Kandamangalam ,Puducherry ,Villupuram- ,Nagapatnam National Highway ,Villupuram district ,
× RELATED புதுச்சேரி சுப்பையா சாலையில்...