×

திறமையற்ற முதல்வராக இருந்தவர் எடப்பாடி: ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதுப்பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க, முழுமையான மதுவிலக்குதான் முழுமையான தீர்வாக அமையும். தமிழகத்தில் மிகவும் திறமையற்ற முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. இப்போதும் திறமையற்ற எதிர்க்கட்சி தலைவராக செயல்படுகிறார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, இதை விட மோசமான நிகழ்வுகளெல்லாம் நடந்துள்ளது. திமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண நிகழ்வை திட்டமிட்டு சிலர் நடத்தியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதில், அதிமுக, பாஜவுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய நிகழ்வை கண்டித்தும், பரிபூரணமான மதுவிலக்கை வலியுறுத்தியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜூலை மாதம் 2ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

The post திறமையற்ற முதல்வராக இருந்தவர் எடப்பாடி: ஜவாஹிருல்லா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,minister ,Jawahirullah ,CHENNAI ,Humanist People's Party ,Edappadi Palaniswami ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை...