×

2 வயது குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் போலீசில் புகார்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி(28). இவர் விசித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மித்ரன் என்ற 4 வயது மகனும் காயத்ரி என்ற 2 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 19ம் தேதி காலை மனைவி காயத்திற்கு உடல்நிலை சரியில்லாததால் பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மனைவி மற்றும் தனது மகளையும் ஆட்டோ ஏற்றி அனுப்பி உள்ளார் உமாபதி.

ஆனால் மருத்துவமனைக்கு சென்ற பிறகு மனைவி மற்றும் குழந்தை மீண்டும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த கணவன் உமாபதி மப்பேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன உமாபதியின் மனைவி மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: திருவள்ளூர் அடுத்த விடையூர் காரணி பகுதியைச் சேர்ந்தவர் ஆதி(50). இவரது மகள் மேனிகா(28). இவர் திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா கல்லூரியில் லேப் டெக்னீசியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 19ம் தேதி காலை 7 மணி அளவில் வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆதி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மேனிகாவை தேடி வருகின்றனர்.

The post 2 வயது குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Umapathi ,Namachivayapuram ,Kadambathur ,Vichitra ,Mithran ,Gayatri ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...