கோடை விடுமுறையில் பிரபு தேவாவின் முசாசி ரிலீஸ்

சென்னை: பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘முசாசி’ படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் படம் ‘முசாசி’. ஆக்‌ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது. இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி இசையமைப்பில், பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கும் இந்த பாடலுக்கு, நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்திருக்கிறார்.

The post கோடை விடுமுறையில் பிரபு தேவாவின் முசாசி ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: