×

புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு; பேருந்து நிலையத்தில் கத்தியுடன் கல்லூரி மாணவர் 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நின்றுகொண்டு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், பஸ் டே கொண்டாடுவதற்காக கூட்டமாக இருப்பதாகவும் அதற்காக குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தியபோது கத்திகள் வைத்திருந்தனர்.

இதையடுத்து மாணவர்கள் 4 பேரை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் என்பதும் பஸ் டே கொண்டாடுவதற்காக வந்தோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், தாம்பரம் அண்ணாநகர், பொன்னேரி என்ஜிஓ. நகர், பொன்னேரி பனப்பாக்கத்தை சேர்ந்தவர், திருவள்ளூர் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்தனர். கத்திகளை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு, ‘‘தங்கள் கல்லூரியில் படித்துவரும் திலீப், பூவின், ரவி ஆகியோரிடம் வாங்கியதாக தெரிவித்தனர். இதுசம்பந்தமாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எதற்காக கத்தி வைத்திருந்தார்கள், மற்ற கல்லூரி மாணவர்களிடம் மோதல் உள்ளதா அல்லது பஸ் டே கொண்டாடும்போது கத்தியை வீசி ரிலீஸ் எடுக்க வைத்திருந்தார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு; பேருந்து நிலையத்தில் கத்தியுடன் கல்லூரி மாணவர் 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Dandiyarpettai ,Nuthuwanarpet ,station ,Tolgate ,Chennai Puduvannarappettai ,Buthuvannarappetta ,Dinakaran ,
× RELATED பைக் மீது பஸ் மோதி தலை நசுங்கி வாலிபர் பலி