×

பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சியின் மேலிட பொறுப்பாளரிடம் தமிழிசை புகார்

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை புகார் அளித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜகவை சேர்ந்தவர்களே தன்னை விமர்சிப்பது குறித்து சென்னையில் நடைபெற்றுவரும் பாஜக மையக்குழு கூட்டத்தில் தமிழிசை சரமாரி புகார் தெரிவித்துள்ளார். இணையதளங்களில் பாஜக நிர்வாகிகளே ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துகளை பதிவிடுவதை தடுக்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

The post பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சியின் மேலிட பொறுப்பாளரிடம் தமிழிசை புகார் appeared first on Dinakaran.

Tags : Tamilisai ,BJP ,Chennai ,Arvind Menon ,Tamil Nadu ,Lok Sabha elections ,president ,Annamalai ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...