×

பார்சலுக்குள் பாம்பு.. ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை திறந்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி : மன்னிப்பு கேட்ட அமேசான்!!

பெங்களூரு : பெங்களூருவில் அமேசான் நிறுவனத்தால் டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்த ஐ.டி.தம்பதி, பாம்பு ஒன்று சீறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெங்களுருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு தம்பதி வீடியோ கேம் கட்டுப்பாட்டு கருவி ஒன்றை ஆன்லைன் வாயிலாக வாங்க எண்ணி உள்ளனர். அதன்படி, அமேசான் நிறுவனத்தில் அதனை ஆர்டரும் செய்துள்ளனர். வீடு தேடி வந்த டெலிவரி பிரதிநிதியிடம் இருந்து பார்சலை பெற்ற அந்த தம்பதி, ஆவலுடன் அதனை பிரித்துள்ளனர். அப்போது, பெட்டிக்குள் இருந்து திடீரென பாம்பு ஒன்று சீரியதால் அச்சம் அடைந்த அவர்கள் பார்சலை விட்டு தள்ளி சென்றனர்.

பார்சலை ஓட்ட பயன்படுத்திய டேபில் பாம்பு சிக்கிக் கொண்டதால் ஆபத்தில் இருந்து அவர்கள் தப்பினர். பாதிக்கப்பட்ட தம்பதி உரிய வீடியோ ஆதாரத்துடன் அமேசான் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் முறையிட்டனர். இதையடுத்து மன்னிப்பு கோரிய அமேசான் நிறுவனம், அவர்கள் செலுத்திய முழு தொகையையும் திரும்ப அளித்தது. ஆனால் பார்சலில் இருந்த பாம்பால் தங்களுக்கோ அல்லது டெலிவரி பிரதிநிதிக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இருந்ததாக கூறியுள்ள அந்த தம்பதி, இது அமேசானின் அலட்சியத்தை காட்டுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

The post பார்சலுக்குள் பாம்பு.. ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை திறந்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி : மன்னிப்பு கேட்ட அமேசான்!! appeared first on Dinakaran.

Tags : Snake ,Amazon ,BANGALORE ,Bengaluru ,Dinakaran ,
× RELATED ஆர்டர் செய்த பொருளுடன் உயிருள்ள...