×

பாஜக பிரமுகரின் கணவருக்கு வெட்டு – 2 பேர் சரண்

சென்னை: திருமங்கலத்தில் பாஜக பிரமுகரின் கணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் சரணடைந்தனர். மகளிர் அணி நிர்வாகி நதியாவின் கணவர் சீனிவாசன் கடந்த 14-ம் தேதி ஓட ஓட விரட்டி வெட்டப்பட்டார். வழக்கில் தேடப்பட்டு வந்த பாலாஜி என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மற்றொரு நபர் கார்த்திகேயன் என்ற சின்ன அப்பு திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வழக்கில் சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த் உட்பட 5 பேர் மறுநாளே சரணடைந்தனர்.

The post பாஜக பிரமுகரின் கணவருக்கு வெட்டு – 2 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Thirumangala ,Nadia ,Sinivasan ,Balaji ,Rumampur Court ,Bhajaka ,Saran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...