×

“சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்

சென்னை: சாகர் கவாச் என்ற 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகையை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தொடங்கினர். இந்திய கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. நாளை மாலை 5 மணி வரை சாகர் கவாச் ஒத்திகை நடைபெறுகிறது. கன்னியாகுமரி கடல் பகுதியில் அதிநவீன ரோந்து படகுகள் மற்றும் தொலைநோக்கு கருவிகள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. குமரி மீனவ கிராமங்களான ஆரோக்கியபுரம், கோவளம், சின்னமுட்டம், மணக்குடி என 48 கிராமங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. சந்தேகம்படும்படி கடலில் தென்படும் கப்பல்கள், படகுகள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் இருந்தாலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post “சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sagar Gavach ,CHENNAI ,Tamil Nadu Coast Guard Group Police ,Sagar Kavach ,Indian Ocean ,Sagar ,
× RELATED மாமல்லபுரம் கோவளத்தில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை