×

மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நேற்று காலை 6 மணிக்கு 2வது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாய் வெடிப்பை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அது சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் மின் உற்பத்தி துவங்கும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

The post மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Dinakaran ,
× RELATED மூதாட்டியை கழுத்தறுத்து கொன்ற...