இடைத்தேர்தலை சந்திக்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல்லிற்கு நேற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: மோடி எதேச்சதிகார ஆட்சி நடத்தி பழக்கப்பட்டவர். கூட்டணி ஆட்சி எத்தனை நாளைக்கு நடத்த போகிறார் என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் என சொல்வது மோசடியானது. இடைத்தேர்தலை சந்திக்கின்ற திராணியோ, தைரியமோ அதிமுகவிற்கு இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை.

மேற்கு வங்க ரயில் விபத்திற்கு ஒன்றிய அரசின் ரயில்வே துறை தான் பொறுப்பு ஏற்க வேண்டும், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டி தப்பிக்க நினைப்பதை ஏற்க முடியாது. விபத்துக்கு உரிய காரணம் கூறாத ரயில்வே அமைச்சர், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீட் தேர்வில் நாடு முழுவதும் பெரியளவில் குளறுபடிகள் ஏற்பட்டு உச்ச நீதிமன்றமே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. எனவே ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

The post இடைத்தேர்தலை சந்திக்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை: கே.பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: