×

மெரினாவில் தூங்கிய மீனவர் மர்ம மரணம்: கொலையா என விசாரணை

சென்னை: திருவல்லிக்கேணி அயோத்தியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன் (55). மீனவரான இவர், நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரையில் தனது மீன்பிடி பொருட்கள் உள்ள கொட்டகையில் தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் காத்தவராயன் எழுந்து வெளியே வராததால், அவரது நண்பரான மணிமாறன் என்பவர் காத்தவராயனை எழுப்பியுள்ளார். அப்போது அவர் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மணிமாறன் மெரினா போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி விரைந்து வந்த போலீசார், காத்தவராயனை பரிசோதனை செய்த போது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும், காத்தவராயன் முதுகு உள்ளிட்ட பல இடங்களில் சிகரெட் சூடு வைத்த தீக்காயங்கள் இருந்ததால், கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

The post மெரினாவில் தூங்கிய மீனவர் மர்ம மரணம்: கொலையா என விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kathavarayan ,Tiruvallikeni Ayodhyakuppam ,Marina beach ,
× RELATED பின்னத்தூர் காத்தவராயன் கோயில் பஸ்...