×

அசாம் உள்துறை செயலாளர் தற்கொலை

கவுகாத்தி: அசாம் உள்துறை செயலாளர் ஷிலாத்தியா சேத்தியா மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2009ம் ஆண்டு பிரிவை சேர்ந்த இந்திய காவல் பணி அதிகாரியான ஷிலாத்தியா சேத்தியா டின்சுகியா மற்றும் சோனிப்பூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், அசாம் காவல்துறை 4வது பட்டாலியனின் கமான்டன்டாகவும் பணியாற்றினார். சேத்தியாவின் மனைவி மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து சோகத்தில் இருந்து சேத்தியா மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

The post அசாம் உள்துறை செயலாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Assam ,Home ,Guwahati ,Home Secretary ,Shilatia Sethiya ,Shilathiya Sethia ,Indian ,Superintendent ,Dinsukia ,Sonipur ,Assam Home Secretary ,Dinakaran ,
× RELATED அசாமில் கின்னஸ் சாதனை பெண் நடத்தும் டீ கடை: குவியும் பாராட்டு