×

செங்கல்பட்டு அருகே காவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காவலர் வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளைடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் உஷாராணி (37). சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது, கணவர் ராஜேஷ் (40). சென்னை பீர்கங்கரணை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் காவல் நிலையதிற்கு சென்று ராஜேஷ் வீடு திரும்பியுள்ளார்.

இவரது, மனைவி உஷாராணியும் ஊரப்பாக்கத்தில் உள்ள மளிகை கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இரவில் தூங்கிவிட்டு நேற்று காலை எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இதில், பீரோவிலிருந்த 2 சவரன் தங்க நகைகள், ₹25 ஆயிரம் பணம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவை திருடுபோய் இருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்த உஷாராணி, இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், காவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்கல்பட்டு அருகே காவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Usharani ,Athur Sri Ganapathi Nagar ,Urapakkam ,Chennai ,
× RELATED செங்கல்பட்டு அருகே காவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளை