×

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் உள்ள வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 2 லேப்டாப்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி அவென்யூ, வேல்முருகன் 2வது தெருவை சேர்ந்தவர் கிரீஸ் (30). இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அவரது மனைவி பவித்ராவுடன் கிரீஸ் மதுராந்தகத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது பெட்ரூமில் இருந்த பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் 2 லேப்டாப் ஆகியவை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Oorpakkam ,Chengalpattu District ,Lakshmi Avenue, Velmurugan 2nd Street ,Oorpakkam Panchayat, Greece ,Savaran ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு கடன் சங்கத்தின் லாப தொகை அளிப்பு