×

ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பு என்சிஇஆர்டி: காங்.பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ்சின் ஒரு பிரிவாக என்சிஇஆர்டி செயல்படுகிறது என்றும் அரசியல் அமைப்பை தாக்குகிறது என காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) 12 ம் வகுப்பு அரசியல் அறிவியலுக்கான திருத்தப்பட்ட பாடப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் அயோத்தி குறித்த பாடத்தின் பக்கங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அயோத்திக்கு பாஜவினர் ரத யாத்திரை மேற்கெகாண்டது, பாபர் மசூதி இடிப்பு போன்றவை முந்தைய பதிப்பில் இடம் பெற்றிருந்தன.ஆனால் திருத்தப்பட்ட பதிப்பில், இவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இது பாடப்புத்தகங்கள் காவிமயமாக்கும் நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இது தொடர்பாக என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ்பிரசாத் சக்லானி கூறும்போது: கோத்ரா கலவரம், பாபர் மசூதி இடிப்பு, 1984-ல் சீக்கியருக்கு எதிரான கலவரம் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய அவசியம்இல்லை. மாணவ பருவத்தில் கலவரம், வன்முறை பற்றி அவர்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை. அவர்கள் வளர்ந்த பிறகு இதைப் பற்றி எல்லாம் படித்து தெரிந்துகொள்ளப் போகிறார்கள். நேர்மறை எண்ணம் கொண்ட சமூகத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

இந்தநிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில்,நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) என்சிஇஆர்டியைக் குற்றம் சாட்டியுள்ளது. என்சிஇஆர்டி ஒரு அரசு நிறுவனமாக செயல்படவில்லை.இது கடந்த 2014 முதல் ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் மதசார்பின்மை மற்றும் கட்சிகளின் கொள்கைகள் பற்றி விமர்சித்துள்ளது. பாடபுத்தகங்களை தயாரிப்பது தான் என்சிஇஆர்டியின் பணி. அரசியல் துண்டு பிரசுரங்கள் விநியோகம் மற்றும் பிரசாரங்களை செய்வது அதன் வேலை அல்ல.

நாட்டின் அரசியலமைப்பின் மீது என்சிஇஆர்டி தாக்குதல் நடத்தி வருகிறது. என்சிஇஆர்டி என்பது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில். நாக்பூர் அல்லது நரேந்திர கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அல்ல என்பதை என்சிஇஆர்டிக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகெட் கோகலே,வெட்கமற்ற தேஜ கூட்டணி அரசு பல சங்கடமான உண்மைகளை மாணவர்களிடம் இருந்து மறைக்க முயலுகிறது. அந்த வாதத்தின்படியே பார்த்தாலும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் உலகப்போரை பற்றி மாணவர்களுக்கு ஏன் கற்பிக்க வேண்டும். வரலாற்றில் மோடியும்,பாஜவினரும் கலவரக்காரர்கள் என்பதால் வெட்கப்படுகிறார்களா?எதற்காக மாணவர்களிடம் உண்மையை மறைக்கின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பு என்சிஇஆர்டி: காங்.பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : RSSC ,NCERD ,Public ,Jairam Ramesh ,NEW DELHI ,CONGRESS GENERAL SECRETARY ,RSS ,National Education Research and Training Council ,NCERT ,General Secretary ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில்...