×

மோடி, அமித்ஷா கட்டளைப்படி விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்த எடப்பாடி: மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு

விருதுநகர்: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் எம்பி, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பை விருதுநகரில் இன்று தொடங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அவர்கள் தங்களது முதலாளி கூறியதை செய்துள்ளனர். அதாவது, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் இட்ட கட்டளையை எடப்பாடி பழனிசாமி அப்படியே நிறைவேற்றியுள்ளார் என்றார்.

சுதந்திர போராட்ட தியாகிகளை சாதி தலைவர்களாக மாற்றி வைத்துள்ளனர் என்ற தமிழக ஆளுநரின் கருத்து குறித்து கேட்டபோது, ‘சாதி, மத அரசியல் செய்வது ஆர்எஸ்எஸ் டிஎன்ஏவில் தான் உள்ளது. ஆர்எஸ்எஸ் வழிவந்த ஆளுநர் இது குறித்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது. இந்தியா முழுவதும் சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்து வரும் ஆர்எஸ்எஸ், பாஜகவினருக்கு இது குறித்து பேச அருகதையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post மோடி, அமித்ஷா கட்டளைப்படி விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்த எடப்பாடி: மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : EDAPPADI ,WIKRAWANDI ,MODI ,AMITSHAH ,MANIKAMTHAKUR ,Virudhunagar ,Manikam Tagore ,Virudhunagar Parliamentary Constituency ,Dimuka Alliance Congress ,Vikrawandi ,Edapadi ,
× RELATED என்னது மீண்டும் ரீ என்ட்ரீ தர்றாங்களா?...