×

சென்னை: 4 டன் குட்கா பறிமுதல் 4 பேர் கைது

சென்னை: பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்து சென்னை முழுவதும் விற்பனை செய்த 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. சென்னை முழுவதும் குட்கா விற்பனை செய்தது தொடர்பாக பால்ராஜ், வில்சன், முத்துக்குமார், சிவா கைது செய்யப்பட்டனர். குன்றத்தூர் பகுதியில் வைத்து குட்காவை பிரித்து சென்னை முழுவதும் விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது. டி.பி.சத்திரம் பகுதியில் வாகன தணிக்கையில் சரக்கு வாகனத்தில் இருந்து 4 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னை: 4 டன் குட்கா பறிமுதல் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bengaluru ,Balraj ,Wilson ,Muthukumar ,Siva ,Kunrathur ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...