×

கனமழை காரணமாக சேதமடைந்த சாலையை சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு

கோவை : கோவையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வாறு மழைநீர் ஓடியபோது தார்ச்சாலைகள் சேதமடைந்தது. இதனால் சிறிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கோவை ரெட்பீல்ட்ஸ்சில் உள்ள காமராஜர் சாலையில் ஒரு இடத்தில் கனமழை காரணமாக சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.

இது வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இதனை அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதி மற்றும் போலீசார் கார்த்தி, உதயகுமார் ஆகியோர் நேற்று காலையில் அந்த சாலையில் குண்டும், குழியுமாக கிடந்ததை அளந்து அதற்கு ஏற்றாற்போன்று கான்கிரீட் கலவை கொண்டு வந்து சாலையில் போட்டு சாலையை சீரமைத்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பாராட்டி வருகின்றனர்.

The post கனமழை காரணமாக சேதமடைந்த சாலையை சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...