×

பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை மண்டல அலுவலகத்திற்கு கடந்த 23ம் தேதி 6266782606 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. எதிர் திசையில் பேசிய நபர் இந்தியில், 24 மணி நேரத்திற்குள் மோடியை கொலை பண்ணிவிடுவேன் என்ற கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுகுறித்து உடனே சென்னை பெருநகர தெற்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மோடிக்கு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து சைபர் கிரைம் போலீசாரின் தனிப்படையினர் மத்திய பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர். இதற்கிடையே மோடிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் ஐபிசி 506(2), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,National Intelligence Agency ,Purasaivakam, Chennai ,
× RELATED அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள்...